HomeBreaking Newsமுழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார் ஆளுநர் அர்லேகர்!

முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார் ஆளுநர் அர்லேகர்!

-

- Advertisement -

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று சந்தித்துப் பேசினார்.முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார் ஆளுநர் அர்லேகர்!

முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவரை அவர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

we-r-hiring

தமிழக ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 5-ம் தேதி கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, மார்ச் 12-ம் தேதி தமிழ்நாட்டின் 27-வது ஆளுநராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு சுமார் ஏழு மாதங்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் முறைப்படி முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னர் தற்போது முதல்முறையாக குடியரசுத் தலைவரைச் சந்தித்துள்ளார்.

மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரைச் சந்திப்பது வழக்கமான அரசியலமைப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் ஒன்றாகும். அந்த வகையில், இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதாகக் கருதப்படுகிறது.

 

 

MUST READ