HomeBreaking Newsபொதுவெளியில் மன்னிப்புக் கோரிய பொன்முடி – வழக்கைத் திரும்பப் பெற்ற மனுதாரர்!

பொதுவெளியில் மன்னிப்புக் கோரிய பொன்முடி – வழக்கைத் திரும்பப் பெற்ற மனுதாரர்!

-

- Advertisement -

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.பொதுவெளியில் மன்னிப்புக் கோரிய பொன்முடி – வழக்கைத் திரும்பப் பெற்ற மனுதாரர்!

இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி பொதுவெளியில் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து, வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொன்முடியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இதன் மூலம் சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவர் தெரிவித்ததாகக் கூறப்பட்ட சர்ச்சைக் கருத்துகள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

 

MUST READ