HomeBreaking Newsசென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

-

- Advertisement -

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த வழக்காடிகள் தங்களின் சட்டப் போராட்டங்களுக்கும் நீதி சார்ந்த தீர்வுகளுக்கும் டெல்லி வரை செல்ல வேண்டிய நிலை உள்ளதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

we-r-hiring

1980 முதலே நீடிக்கும் கோரிக்கை!
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1980-ஆம் ஆண்டு முதலே முன்வைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய மக்களின் நீதி பெறும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி செல்ல வேண்டிய சிரமம்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடரவும், சட்டரீதியான தீர்வுகளைப் பெறவும் தென்னிந்தியாவைச் சேர்ந்த வழக்காடிகள் டெல்லிக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் ஏற்படும் பயணச் செலவு, கால விரயம் உள்ளிட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும் எனப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் வேண்டுகோளாக உள்ளது.

MUST READ