spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாகுபலி காளகேயாவை மிஞ்சும் பாபி தியோல்..... 'கங்குவா' வில்லன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பாகுபலி காளகேயாவை மிஞ்சும் பாபி தியோல்….. ‘கங்குவா’ வில்லன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

பாகுபலி காளகேயாவை மிஞ்சும் பாபி தியோல்..... 'கங்குவா' வில்லன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் 3D தொழில்நுட்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. பாகுபலி காளகேயாவை மிஞ்சும் பாபி தியோல்..... 'கங்குவா' வில்லன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! சில தினங்களுக்கு முன்பாக படத்தின் கிளிம்ஸ் வெளியான நிலையில், அதை தொடர்ந்து படத்தின் முதல் இரண்டு போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்தனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஜெட் வேகத்தில் ஏற்றி விட்டது. அந்த வகையில் தற்போது இப்படத்தில் வில்லன் பாபி தியோல் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. உதிரன் என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். பாகுபலி காளகேயாவை மிஞ்சும் பாபி தியோல்..... 'கங்குவா' வில்லன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்த பர்ஸ்ட் லுக்கில் ஒரு கண் மட்டுமே பார்வை கொண்டுவராக வித்தியாசமான பழங்குடியின லுக்கில் இருக்கிறார் பாபி தியோல். போஸ்டரில் அவரை சுற்றி ஏராளமான பழங்குடியினர்கள் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அனிமல் படத்தில் வாய் பேச முடியாத வில்லனாக மிரட்டி இருந்தார். தற்போது இந்த போஸ்டரில் ஒற்றைக் கண் பார்வையிலேயே மிரளவிட்டுள்ளார். பிரத்தியேகமான ஸ்டில் ஆக இல்லாமல் படத்தில் வரும் காட்சியை தான் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டது போல் தெரிகிறது. ஏற்கனவே எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த கங்குவா படத்திற்கு இந்த போஸ்டரால் பாலிவுட்டிலும் எதிர்பார்ப்புகள் எகிறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பாபி தியோல் இன்று தன்னுடைய 55வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  அவருடைய பிறந்தநாள் சிறப்பாக இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

MUST READ