spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுவிறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி!

விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி!

-

- Advertisement -

 

விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி!

we-r-hiring

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நீண்ட நாட்களுக்கு பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், சதமடித்து அசத்தினார். 147 பந்துகளில் 104 ரன்களை எடுத்தார் கில். அவருக்கு அடுத்தப்படியாக அக்ஷர் பட்டேல் 45 ரன்களை எடுத்தார். இதையடுத்து, 399 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்துள்ளது.

சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளியை குணமாக்கும் நுணா இலை மூலிகை!

இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 332 ரன்களே எடுக்க வேண்டிய நிலையில், இரு அணிகளும் வெற்றி பெற முயலும் என்பதால் நான்காவது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ