spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!

நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!

-

- Advertisement -

நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!இன்றுள்ள காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் வெளியில் இருக்கும் நுண்கிருமிகள் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இதனை தடுக்க இயற்கையான முறைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது அவசியம். தற்போது இயற்கையான முறையில் செய்யக்கூடிய மூலிகை தேநீரின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

மூலிகை தேநீர் செய்ய தேவையான பொருட்கள்:

we-r-hiring

தண்ணீர் – 250 மில்லி லிட்டர்
மிளகு – 5
பட்டை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சம்பழம் – பாதி அளவு
கிராம்பு – 4
துளசி இலை – 10

செய்முறை:

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 250 மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் மிளகு, இஞ்சி , பட்டை ஆகிய பொருட்களை இடித்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அந்த தண்ணீரில் கொடுக்கப்பட்டுள்ள கிராம்பு மற்றும் துளசி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இந்த தண்ணீரானது பாதி அளவு வற்றி வரும் வரை நன்கு சூடு படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட வேண்டும். இப்போது நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர் தயார்.நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!

இதனை நாள்தோறும் காலை வேளையில் பருகி வர நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

இருப்பினும் இம்முறையை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

MUST READ