74வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


டெல்லியில் குடியரசு தின விழாவில் அழகுற அணிவகுத்து வந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தஞ்சை பெரியகோவில், ஒளவையார், வேலுநாச்சியார், முத்துலட்சுமி ரெட்டி, இயற்கை விவசாயி பாப்பம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வரி, மூவலூர் ராமாமிர்தம் உள்ளிட்டோரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய ராணுவ ஊர்தி பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தாங்கிய வாகன அணிவகுப்பு மரியாதையையும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இதேபோல் நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் , டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை
