HomeBreaking Newsவந்தே பாரத் ரயிலில் அதிர்ச்சி: பயணியின் உணவு தட்டில் கிடந்த பசை ஜெல் பேக்!

வந்தே பாரத் ரயிலில் அதிர்ச்சி: பயணியின் உணவு தட்டில் கிடந்த பசை ஜெல் பேக்!

-

- Advertisement -

மைசூரிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பசை (Adhesive Gel) டப்பா கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ரயிலில்

we-r-hiring

சேகர் என்பவர் சமீபத்தில் மைசூரிலிருந்து வந்தே பாரத் ரயிலில் சென்னைக்குத் திரும்பி கொண்டிருந்தார். அப்போது IRCTC கேண்டீன் நிர்வாகம் வழங்கிய உணவு தட்டில் ஒட்டும் தன்மையுள்ள ‘அட்ஹசிவ் ஜெல்’ பாக்கெட் ஒன்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சக பயணிகள் உடனடியாக ரயிலின் டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) தெரிவித்தனர். மேலும், உணவு ஒப்பந்ததாரரின் இந்த அலட்சியமான செயல் பயணிகளுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனக் கூறி, ரயிலின் உணவக மேலாளரிடம் சேகர் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, IRCTC பிரிவு அலுவலர் சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் திமுக அறக்கட்டளை விவரங்கள் மறைப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

MUST READ