- Advertisement -
வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரணம் படத்திலிருந்து இரண்டாவது பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது.


கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வைபவ், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் பட்டறையில் உள்ள முக்கிய நடிகர் வைபவ். வெங்கட் இயக்கும் பெரும்பாலான படங்களில் இடம்பெற்று விடுவார் நடிகர் வைபவ். சரோஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மேயாதா மான், கப்பல், பபூன், ஆர்.கே.நகர், அரண்மனை, ஆர்.கே.நகர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். இதில் மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.



