- Advertisement -
புகழ்பெற்ற பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான பிரபலங்களின் பட்டியலில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பெயர் இடம்பிடித்துள்ளது.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை ராஷ்மிகா. பெங்களூரில் பிறந்து வளர்ந்து ஒட்டுமொத்த இந்திய திரை உலக்கையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா. தேயிலை எஸ்டேட் அதிபரின் மகள் தான் ராஷ்மிகா. பள்ளி பருவத்திலேயே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மாடல் துறையை தேர்வு செய்தார். முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ராஷ்மிகாவின் முகம் வெளியே தெரிந்தது.


மாடலாக வலம் வந்த ராஷ்மிகா, கன்னடத்தில் வௌியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வெற்றி ராசிகாவை தெளிந்த சினிமாவிற்கு அழைத்து வந்தது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் அவர் நடித்த கீதகோவிந்தம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. பின்னர் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டில் குட்பாய், மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

