spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கே ஜி எஃப் யாஷ்!

மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கே ஜி எஃப் யாஷ்!

-

- Advertisement -

மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கே ஜி எஃப் யாஷ்!நடிகர் யாஷ், பிரசாந்த் நீ இயக்கிய கே ஜி எஃப் சாப்டர் 1, கே ஜி எஃப் சாப்டர் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்றார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். கே ஜி எஃப் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டயை கிளப்பியது. அதேசமயம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் எனத் திரும்பிய பக்கம் எல்லாம் ராக்கி பாய் ராஜ்ஜியம் தான். அந்த அளவிற்கு இந்த படம் ஆக்ஷன் நிறைந்த படமாக தூள் கிளப்பியது. அதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் TOXIC என்ற படத்தில் நடிக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்புகள் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கே ஜி எஃப் யாஷ்!

இந்நிலையில் நடிகர் யாஷ் கன்னட மாவட்டத்திலுள்ள சித்திரப்பூர் மாதா கோயிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அப்போது சென்ற அவரிடம் அவரின் மனைவி ராதிகா பண்டித், அங்கிருக்கும் பெட்டிக்கடையைப் பார்த்து குச்சி மிட்டாய் வேண்டுமென்று கேட்டிருக்கிறார். உடனடியாக மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த கடைக்கு சென்று குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்திருக்கிறார்.மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கே ஜி எஃப் யாஷ்! நடிகர் யாஷை பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு யாஷ் உடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ