spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் விஜய் ஓகே சொன்னா 'லியோ 2' இயக்க தயார்..... லோகேஷ் கனகராஜ்!

நடிகர் விஜய் ஓகே சொன்னா ‘லியோ 2’ இயக்க தயார்….. லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

நடிகர் விஜய் ஓகே சொன்னால் லியோ 2 படத்தை இயக்கத் தயாராக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஓகே சொன்னா 'லியோ 2' இயக்க தயார்..... லோகேஷ் கனகராஜ்!இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தை இயக்கினார்.நடிகர் விஜய் ஓகே சொன்னா 'லியோ 2' இயக்க தயார்..... லோகேஷ் கனகராஜ்! இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 627 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். அதே சமயம் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜிடம் லியோ 2 படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், ” விஜய் ஓகே சொன்னா லியோ 2 படம் இயக்கத் தயார். நேரம் காலம் கூடி வந்தால் நடக்க வாய்ப்புள்ளது” என்று கூறிய லோகேஷ் கனகராஜ் விஜயின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

MUST READ