திருப்பதி திருமலைக்கு நடிகை தமன்னா தனது தந்தையுடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதிகாலையில் கோவிலுக்கு சென்ற அவர், பாரம்பரிய உடையில் சாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார்.


வேத மந்திரங்கள் முழங்க ஆசீர்வாதம்
தரிசனம் முடிந்த பின்னர் ரங்கநாயக்கலு மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் தமன்னாவுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசீர்வாதம் வழங்கினர். தொடர்ந்து அவருக்கு தீர்த்தப் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
ரசிகர்களுடன் அன்பாக பேசிய தமன்னா
கோவிலில் இருந்து வெளியே வந்த தமன்னாவை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வத்துடன் சூழ்ந்தனர். அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அப்போது சிறுவன் ஒருவர் செல்ஃபி கேட்ட நிலையில், அவருடன் அன்பாகப் பேசி தமன்னா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பரபரப்பான சினிமா பயணம்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தமன்னா நடித்து வருகிறார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இந்தியில் 5 புதிய படங்களிலும் நடித்து வருவதுடன், வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவைத் தாண்டி தொழில் துறையிலும் தமன்னா ஈடுபட்டு வருகிறார்.
அனைவரும் வந்து ஆதரவு அளியுங்கள் – போர்ச்சுக்கல் கார் பந்தயத்தில் அஜித்குமார்
