- Advertisement -
இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். தமிழ் திரையுலகை மேலும் ஒரு படி மேலே எடுத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். இவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படத்திலும் அவர் நாயகியாக நடித்திருந்தார். அப்படத்தில் பத்திரிகையாளராக நடித்து புகழ் பெற்றார் அதிதி ஷங்கர். நடிப்பு மட்டுமன்றி நடனம், பாடல் என அனைத்து துறைகளிலும் அவர் கலக்கி வருகிறார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் மற்றும் பல திரைப்டங்களில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.




