மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.


மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குவாலியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. போர் விமானங்கள் விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அடந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான மிராஜ்-2000 ரக விமானம் பிரான்சிடம் இருந்தும், சுகோய்-30 ரக விமானம் ரஷ்யாவிடம் இருந்தும் வாங்கப்பட்டவை. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்டபோது 2 விமானங்களும் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
