2023- 24 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போதைய மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்தார்.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜி20 நாடுகளின் தலைமையில் பொறுப்பை ஏற்றுள்ளதால் உலக பொருளாதாரத்தி இந்தியாவின் பங்கை மேம்படுத்த முடியும். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக 2.2 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை மேம்படுத்த வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட இழை பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதிப்பு வாய்ந்த தோட்டக்கலை பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த இயக்கமாக எடுத்து செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும். 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும். பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும். ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும். விவசாயத்தில் தொழில் முனைவோரை உருவாக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும். மோடி ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது” என்றார்.
