Homeசெய்திகள்இந்தியாரயில்வே துறைக்கு ₹2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

ரயில்வே துறைக்கு ₹2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

-

- Advertisement -

இந்தாண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2,40,00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

nirmala sitharaman budget

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றியபோது, “உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை விற்பதற்கு ஒற்றுமை அங்காடிகளை மாநிலங்கள் அமைப்பது ஊக்குவிக்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைக்கோடி மக்களையும் திட்டங்கள் சென்றடைதல், உள்கட்டமைப்புகள் மற்றும் முதலீடு, வளங்களை பயன்படுத்துதல், வேளாண் வளர்ச்சி ஆகியவையே இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்.

we-r-hiring

ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும். கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.5,300 கோடி வழங்கப்படும். நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர். இளைஞர்களின் திறனை வளர்க்க நாடு முழுவதும் 30 சர்வதேச தரத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி. நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு. போக்குவரத்து துறைக்கு ₹75,000 கோடி ஒதுக்கீடு. நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்.

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும். குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும், பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும். இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும். ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயம் நோக்கி வழிநடத்துவோம், இயற்கை உரங்கள் பயன்படுத்து ஊக்குவிக்கப்படும்.

Home

5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த தொழில்களில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ