- Advertisement -
ஹாலிவுட் திரையுலகில் அடுத்தடுத்து நடிககைகள் இறந்து வரும் நிலையில், மற்றொரு நடிகை சோபியா லியோன் என்பவரும் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 வயதாகும் சோபியா, அமெரிக்க திரையுலகில் நடித்து வருகிறார். மேலும், இவர் ஆபாச பட நடிகையும் கூட. ஆபாச திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் அதில் நடிப்பது என்பது சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்று பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்ககளுக்கு ஈடாக பெரும் புகழும், வருமானமும் பெற்றுக் கொண்டிருந்தவர் சோபியா. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.


இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவுக்கு ரசிகர்களும் திரை உலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அண்மைக் காலமாக ஆபாச நடிகைகளின் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து பலர் மர்மமான முறையில் இறந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, பிரபல ஹாலிவுட் நடிகை காக்னி லின் கார்டர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



