Homeசெய்திகள்சினிமாபார்வதி மேனன் பிறந்தநாள் இன்று..... 'தங்கலான்' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

பார்வதி மேனன் பிறந்தநாள் இன்று….. ‘தங்கலான்’ பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

பிரபல நடிகை பார்வதி மேனன், கடந்த 2006 இல் மலையாளத்தில் வெளியான அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கியவர். இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ படத்தின் மூலம் அறிமுகமானார். பார்வதி மேனன் பிறந்தநாள் இன்று..... 'தங்கலான்' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!தமிழில் இவர் அறிமுகமான முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் வென்றுள்ளார். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். அந்த வகையில் இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாராட்டுகளை பெரும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்வதி மேனன் கங்கம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பார்வதி மேனன் பிறந்தநாள் இன்று..... 'தங்கலான்' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!இந்நிலையில் இன்று 36 வது பிறந்த நாளை கொண்டாடும் பார்வதி மேனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தங்கலான் படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தங்கலான் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படமானது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று பட குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி பட குழுவினர் சார்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ