- Advertisement -
தொழில் அதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் லண்டனில் ஆடம்பர நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் எப்படி எங்கு நடக்கப்போகிறது என்பது தான் ஒட்டுமொத்தமாக நாட்டில் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். ஏனெனில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளே பலரையும் வியப்பை ஆழ்த்தியது. அதனால், திருமணத்தில் எதுபோன்ற விசேஷங்கள், எங்கு நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜாம் நகரிில் மூன்று நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை கண்டு நாடே வியந்து போனது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த நிகழ்ச்சிகளை அம்பானி ஏற்பாடு செய்திருந்தார்.


இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமன்றி நாட்டின் பெரும் தொழில் அதிபர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் அவர்களின் திருமணம் குறித்த தகவல் அடுத்து வெளியாகி உள்ளது



