Homeசெய்திகள்தமிழ்நாடுபொள்ளாச்சி சம்பவம்: ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

பொள்ளாச்சி சம்பவம்: ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

-

- Advertisement -

பொள்ளாச்சி சம்பவ அரசாணை தொடர்பான வழக்கை ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

edappadi palanisamy
edappadi palanisamy

சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் 9 பேர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முழுமையாக விசாரிக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் தலைமைச்செயலாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

we-r-hiring

இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவ தொடர்பான இந்த வழக்கை ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெயர்களை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Home New

பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

 

MUST READ