Homeசெய்திகள்இந்தியாசர்வதேச விமான கண்காட்சி- பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

சர்வதேச விமான கண்காட்சி- பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

-

- Advertisement -

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

PM Modi to inaugurate Aero India 2023 – Asia's biggest aero show - in  Bengaluru on 13th February - PM Modi to inaugurate Aero India 2023 – Asia's  biggest aero show in Bengaluru on 13th February -

we-r-hiring

பெங்களூரு நகரில் எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி 5 நாட்கள் வரும் 17-ந் தேதி வரை‌ நடைபெற உள்ள நிலையில் 98 நாடுகளைச் சேர்ந்த 110 நிறுவனங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து 701 நிறுவனங்கள் என மொத்தம் 811 நிறுவனங்களுக்கு பங்கேற்றுள்ளனர்.

251 ஒப்பந்தங்கள் மூலமாக சுமார் 7,500 கோடி ரூபாய் வணிக ஒப்பந்தம் இந்த கண்காட்சி மூலமாக இந்திய நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியை பிரதமர் துவங்கி வைத்த பிறகு முதலில் மூன்று கிரண் எம் கே ஹெலிகாப்டர்கள் தேசிய கொடியை கொண்டு திரங்கா வியூகத்தில் பறந்து சென்றும் 4 எம் 17 ஹெலிகாப்டர்கள் விமான கண்காட்சியின் கொடியை ஏந்தியவாறு துவஜ் வியூகத்தில் பறந்தும் விமானப்படையின் சாக நிகழ்ச்சி துவங்கியது.‌

பின்பு கடலோர பாதுகாப்பில் ஈடுபடும் மூன்று மார்க் 3 ஹெலிகாப்டர்கள், தாக்குதலுக்கு பயண்படுத்தப்டும் மூன்று ரக மார்க் 4 ருத்ரா ஹெலிகாப்டர்கள், அதிக உயரத்தில் பறக்கும் தன்மை கொண்ட இலகு ரக பிரசன்ட் ஹெலிகாப்டர்கள் மூன்று, மார்க் 2 வகை சாரங் ஹெலிகாப்டர்கள் பறந்து வந்து இந்திய விமானப்படையின் கம்பீரத்தை பறைசாற்றியது. பின்பு 5 விமானங்கள் (ஹாக் போர் விமானம், ஐ ஜே டி ஜெட் பயிற்சி விமானம், எச் டி டி பயிற்சி விமானம்) வெண் புகையை கக்கியவாறு குருகுல வியூகத்தில் பறந்து வந்தது. இதில் இந்திய விமானப்படை தளபதி வி ஆர் சௌத்ரி ஒரு விமானத்தை இயக்கி வந்தார்.

Aero India 2023 live updates: India aims to take defence exports to $5  billion by 2024-25, says PM Modi | Mint

அதை தொடர்ந்து ருத்ரா வியூகத்தில் அதிநவீன இலகு ரக விமானம் மத்தியில் இருக்க அதன் இருபுறமும் இரண்டு சுகாய் 30 இரண்டு மிக 29 ரக விமானங்கள் கம்பீரத்துடன் பறந்து வந்தன. பின்பு அர்ஜுனா வியூகத்தில் முதன்முறையாக இரண்டு ரபேல் விமானம் இடம்பெற்றது. ரபேல் உடன் இந்த வியூகத்தில் மிக் 29, ஜாக், எம் 2000 போர் விமானங்கள் பறந்து சென்றன. பின்பு இந்தியாவின் அதிநவீன இலகு ரக தேஜஸ் ஜெட் விமானங்கள் பறந்து சென்ற பிறகு திரிசூல் வியூகத்தில் சுகாய் 30 ரக விமானங்கள் பறந்து சென்று பிரம்மிக்க வைத்தன.

விமான சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு விழாவில் முதலில் பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் உலக அளவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியா முக்கிய மையமாக மாறி வருவதாகவும் பரந்து விரிந்துள்ள உலக வான்பரப்பில் இந்திய நாடு ஜொலிக்கும் நட்சத்திரமாக மாறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Home New

பின்பு பிரதமர் நரேந்திர மோடி 2023 விமான கண்காட்சிக்கான அஞ்சல் தலையை வெளியிட்டு உரையாற்றினார். அவர் உரையின் போது இந்திய நாட்டை உலக நாடுகள் சந்தையாக மற்றும் கருகாமல் ஒரு உகந்த ராணுவ கூட்டாளியாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய நாடு புதிய உச்சத்தை எட்டி வருகிறது அதன் அடையாளமாக இன்று பெங்களூரு வான் பரப்பு எடுத்துரைத்துள்ளது என்று கூறினார்.

MUST READ