spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகருடன் படத்தின் டிரைலர் ரிலீஸ்... ரசிகர்களை மிரட்ட வரும் சூரி...

கருடன் படத்தின் டிரைலர் ரிலீஸ்… ரசிகர்களை மிரட்ட வரும் சூரி…

-

- Advertisement -
சசிகுமார் மற்றும் சூரி இணைந்து நடித்திருக்கும் கருடன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

விடுதலை திரைப்படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்தவர் நகைச்சுவை நடிகர் சூரி. இவர் கோலிவுட்டில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகத்திலும் சூரி நடித்து வருகிறார். இதனிடையே, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

we-r-hiring
தொடர்ந்து சூரி நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு திரைப்படம் தான் கருடன். இத்திரைப்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதை எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாசு ஆகிய திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார் மற்றும் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, மைம் கோபி, ஷிவதா, ரோஷினி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கருடன் திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

MUST READ