- Advertisement -
பாராசூட்டில் பறந்த விஜய் பட கதாநாயகியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மீனாட்சி சௌத்ரி. தெலுங்கில் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், கடந்த 2023-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த கொலை திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.


இதைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இதற்கு முன்பாக தமிழில் அவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியானது. இதில் ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.



