Homeசெய்திகள்இந்தியாகாதில் பூ வைத்து சட்டப்பேரவையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

காதில் பூ வைத்து சட்டப்பேரவையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

-

- Advertisement -

பாஜக அரசு பொதுமக்களுக்கு காதில் பூ சுற்றி வருகிறது என்பதை உணர்த்தும் விதமாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் காதில் பூ வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.

karnataka

கர்நாடக மாநிலத்தில் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். முதன் முறையாக கர்நாடக அரசு சார்பில் 3 லட்சம் கோடி ரூபாய்கான பட்ஜெட் இது. மேலும் முதன் முறையாக இம்முறை காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வரும் நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன் 77,750 வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணி முதல் ராகு காலம் என்பதால் முதல்வர் தனது உரையை 10:15க்கு தொடங்கினார்.

we-r-hiring

ராகு காலம் முடிவதற்குள் அவர் தனது உரையை முடிக்க முடிவு செய்த காரணத்தினால் மிகவும்‌ அவசர அவசரமாக தனது உரையை படித்தார். முதல்வர் பட்ஜெட் உரையை துவங்கிய போது எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா உள்பட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் காதில் பூ சூடி அமர்ந்திருந்தனர்.

பூவை எடுத்து விட்டு அமருமாறு முதல்வர் கோரிக்கை விடுத்த நிலையில் சித்திராமையா அவையில் பாஜக அரசு பொதுமக்கள் காதில் போலியான திட்டங்கள் மூலமாக பூ சூட்டுகிறது அதை மக்களுக்கு எடுத்துரைக்க தாங்கள் காதில் பூ அணிந்து வந்து ள்ளோம் என்றார். அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே விவாதம் ஏற்பட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. காங்கிரஸ் தொடர்ந்து காதில் பூ அணிந்து அவையில் அமர்ந்திருந்த நிலையில் தனது பட்ஜெட் உரையை முதல்வர் தொடர்ந்தார்.

 

MUST READ