spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கோட்' படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள விஜய்..... யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!

‘கோட்’ படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள விஜய்….. யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் அவர் பாடகராகவும் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'கோட்' படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள விஜய்..... யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இதில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் இந்த படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வரும் நிலையில் படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. 'கோட்' படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள விஜய்..... யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!தற்போது கிடைத்த தகவலின் படி விஜய் இதில் மூன்று வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் ஏ யை தொழில் நுட்பத்தின் மூலம் தோன்ற இருக்கிறார். பின்னர் இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து திரிஷா குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார். இவ்வாறு பல அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் விஜய், முதன்முறையாக கோட் படத்தில் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார் என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். 'கோட்' படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள விஜய்..... யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!ஏற்கனவே விஜய் குரலில் விசில் போடு பாடல் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்தது. அதைத்தொடர்ந்து விஜய் குரலில் வெளியாகும் அடுத்த பாடல் ஜூன் மாதத்தில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் பாடலின் மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகமாக்கியுள்ளது.

MUST READ