spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹாங்காங்கில் மழையை ரசிக்கும் நயன் - விக்கி தம்பதி... புகைப்படங்கள் வைரல்...

ஹாங்காங்கில் மழையை ரசிக்கும் நயன் – விக்கி தம்பதி… புகைப்படங்கள் வைரல்…

-

- Advertisement -
ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்றிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டார். அண்மையில் பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

we-r-hiring
அட்லீ இத்திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தின் மெகா ஹிட்டைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நயன்தாரா பாலிவுட்டில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழிலும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே நடிகை நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அவ்வப்போது பல வெளிநாடுகளுக்கு குடும்பத்தோடு நயன்தாரா சுற்றுலா செல்கிறார். இந்நிலையில், தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளுடன் ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
மழையை ரசித்தபடி, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சாலையில் நடந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ