spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை

தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ,54,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்த நிலையில்,. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்றைய விலையில் ஒரு கிராம் ரூ.6,730க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை நேற்றைய விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ.100 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1.00.000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

MUST READ