spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் சரிவில் தங்கம் விலை....இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தொடர் சரிவில் தங்கம் விலை….இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

-

- Advertisement -

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமுமின்றி சனிக்கிழமை விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.44 ரூபாய் குறைந்து ரூ.6,666-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

 

 

MUST READ