Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்: பள்ளி நிர்வாகம் மீது டிடிவி தினகரன்...

அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்: பள்ளி நிர்வாகம் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் மானூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்: பள்ளி நிர்வாகம் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

குடிநீரில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்

we-r-hiring

மானூர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தினசரி பயன்படுத்தும் குடிநீரில் இதுபோன்ற பொருள் கலந்ததாக கண்டறியப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகம் மீது கேள்வி

இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளி நிர்வாகமே, இந்த விவகாரத்தை இரண்டு நாட்களாக மூடி மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது சம்பவத்தில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் முயற்சி நடைபெற்றதா என்ற சந்தேகம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுப்பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி

மானூர் பள்ளி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்புற அரசுப்பள்ளிகளில் போதிய சுற்றுச்சுவர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலை இருப்பதாகவும் டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பள்ளி வளாகங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதாகவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியம் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமையக்கூடும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறை உதவியுடன் விசாரணை நடத்த வலியுறுத்தல்

மானூர் அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காவல்துறையின் உதவியுடன் முழுமையான விசாரணை நடத்தி, குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பான உண்மை நிலையை கண்டறிந்து, பள்ளி மாணவர்களின் குடிநீர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு: சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு!

MUST READ