- Advertisement -
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஜீவா. தொடக்கத்தில் காதல் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த ஜீவா அடுத்து ஆக்ஷன் ஹீராவாக அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்திருந்தார். அண்மைக் காலங்களில் கவலை வேண்டாம், என்றென்றும் புன்னகை, சங்குலி புங்குலி கதவ திற, கலகலப்பு 2 என முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கமர்ஷியல் படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். நடிகர் ஜீவா திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

இதை கொண்டாடும் விதமாக அண்மையில், இசை தயாரிப்பில் களம் இறங்கினார் நடிகை ஜீவா. அண்மையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான யாத்ரா இரண்டாம் பாகத்தில் ஜீவா நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் மம்மூட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


