Homeசெய்திகள்இந்தியாஉச்சத்தை எட்டிய ரூபா, ரோகிணி மோதல்

உச்சத்தை எட்டிய ரூபா, ரோகிணி மோதல்

-

- Advertisement -

ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் இருவரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவு.

கர்நாடக மாநிலத்தில் கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரியான ரோகிணி சிந்தூரி மீது கடந்த இரண்டு நாட்களாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

we-r-hiring

ரோகிணி சிந்தூரி பல அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்றும் தனது முகநூல் பதிவில் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு மட்டுமல்லாமல் ரோகிணி சிந்தூரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளது, அரசியல் தலைவர்களுடன் மோதல் போக்கில் இருந்து பின்பு அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது என 19 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ரூபாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த ரோகிணி அவர் மீது தலைமை செயலாளரிடம் புகார் அளித்தார். இதன் பிறகு ரூபா பல ஆதாரங்களுடன் தலைமை செயலாளரிடம் ரோகிணி சிந்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். இருவரின் இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டியிருந்த நிலையில் இன்று கர்நாடக அரசு இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருவர் பணியாற்றி வந்த இடத்திற்கு மாற்று அதிகாரிகளை கர்நாடக அரசு நியமித்ததும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அடுத்து அவரது கணவர் மற்றும் நிலப்பதிவு ஆணையாக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி முனேஷ் அவரை தலைமை செயலக நிர்வாக பிரிவுக்கு இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ