ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பாதுகாப்புத் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்படி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் (Drones) மற்றும் பிற வான்வழிச் சாதனங்களைப் பறக்கவிட முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()
தீவிரக் கண்காணிப்பில் புதுச்சேரி:
இந்தத் தடைகளை மீறி யாரேனும் ட்ரோன்களைப் பறக்கவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, தீவிரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை!
