Homeசெய்திகள்இந்தியாகோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்! கரைபுரண்ட ஓடை நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டு 8 பேர்...

கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்! கரைபுரண்ட ஓடை நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டு 8 பேர் பலி

-

- Advertisement -

கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 8 பேர், கார் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

கோவில் பயணத்தில் ஏற்பட்ட விபத்து

ஒடிசாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மத்தியப் பிரதேசத்திற்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ளனர். முதலில் உஜ்ஜைனிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து டாக்சி மூலம் ஆகர் மால்வா மாவட்டத்தில் உள்ள நால்கேதா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மா பாக்லாமுகி கோவில் அருகே சென்றுகொண்டிருந்த டாக்சி, கரைபுரண்டு ஓடிய ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு விபத்தில் சிக்கியது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும், டாக்சி ஓட்டுநரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உள்ளிட்டோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட காரை மீட்டு, அதற்குள் இருந்தவர்களின் உடல்களை மீட்டனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

37 மி.மீ. மழை பெய்ததாக தகவல்

இந்த பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சேர் சிங் மீனா தெரிவித்துள்ளார்.

இந்த மழை அபாயகரமான அளவில் இல்லாவிட்டாலும், கோவில் அருகே இருந்த ஓடையில் நீரின் அளவு திடீரென அதிகரித்து கரைபுரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலம் அமைக்க கோரிக்கை

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கால்வாயை கடப்பதற்கு உரிய பாலம் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செமிகண்டக்டர் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு! – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

MUST READ