spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பழ.நெடுமாறன் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - தயா மோகன்

பழ.நெடுமாறன் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – தயா மோகன்

-

- Advertisement -

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி ஊடகத்திற்கு தயா மோகன் அளித்துள்ள பேட்டியில் சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் விதித்துள்ள தடையை நீட்டிப்பதற்கான முன்முயற்சியாகவே பழ நெடுமாறனின் அறிவிப்பை பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தற்போது ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கும் இவர்கள் தான் பிரபாகரனின் வீர மரணம் குறித்த அறிவிப்பை தடுத்தார்கள் என்று தயா கூறி உள்ளார். இப்போது அவ்வாறு சொல்வதற்கான தேவை என்ன என்றும் அவர் வினா எழுப்பி உள்ளார்.

2009 இல் பிரபாகரன் மரணித்த போது நெடுமாறன் யாருடன் தொடர்பில் இருந்தாரோ அவர்களோடு தான் தற்போது தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்ட தயா, புலம்பெயர் தேசங்களில் பிரபாகரன் அவர் மனைவி மதிவதினி மகள் துவாரகா ஆகியோர் உயிரோடு இருப்பதாக சில பிம்பங்களை உருவாக்கி நிதி வசூலில் சிலர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தவர்கள் தான் நிதி வசூலில் ஈடுபட்டதாக தயா மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும் கடந்த 13 ஆண்டுகளில் நடந்தது என்ன என்பதை பழநெடுமாறன் பகுத்தறிந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழநடுமாறனின் அறிவிப்பு எதிரொலியாக இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் இதை காரணம் காட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இலங்கை அரசு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாகவும் தயா மோகன் கூறியுள்ளார்.

இலங்கை அரசு சிங்களர்கள் இடையே பொதுநிலையை உருவாக்கி குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட தீர்வு திட்டத்தைக் கூட தமிழ் மக்களுக்கு தராது என்பதால் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்று அறிவிப்பு இலங்கை தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று தயா மோகன் தெரிவித்துள்ளார்.

MUST READ