Homeசெய்திகள்அரசியல்"கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ..." – மு.க.ஸ்டாலின்...

“கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ…” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

-

- Advertisement -

“மேகதாது அணை விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைக்குத் தனிமைப்பட்டு நிற்கிறார்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

we-r-hiring

கர்நாடக அரசும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் அணுகுமுறையும் குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எச்சரிக்கையை மீறிய முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் அனைவரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எந்தவிதப் பயனையும் அளிக்காது என்று தொடர்ந்து எச்சரித்தோம்.

கர்நாடகாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தெள்ளத்தெளிவாகக் கோரிக்கை வைத்தோம். ஆனால், அந்த எச்சரிக்கைகளையும் கோரிக்கைகளையும் அலட்சியப்படுத்திவிட்டுச் சென்றதால், இன்று முதலமைச்சர் தனிமைப்பட்டு நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

சட்டரீதியான போராட்டமே தீர்வு!

தமிழ்நாட்டிற்குரிய உரியத் தண்ணீரைக் கூடத் தர முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட ஒரு மாநிலத்துடன் சட்டரீதியாக மட்டுமே போராட வேண்டும் என்பதே கடந்தகால நிகழ்வுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட மிகமுக்கியமான படிப்பினையாகும்.

தங்களது உபரிநீரை வெளியேற்றுவதற்கான ஒரு வெறும் வடிகால் பகுதியாக மட்டுமே கர்நாடகம் தமிழ்நாட்டைப் பார்க்கிறது என்பதை உணர்ந்து, இனிமேலாவது சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் தொடக்கம்: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்! – தமிழ்நாடு, புதுச்சேரி இயக்குனர் சுந்தரேஷ்பாபு பேட்டி

MUST READ