- Advertisement -
ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியார் சமூதாயத்தை சர்ச்சைகுறிய வகையில் பேசியதால் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த தொகுதியில் அதிகமாக வசிக்கும் ஒரு சாதியை புகழ்ந்தும், குறைவாக வசிக்கும் அருந்ததி சமுதாயத்தினரை இகழ்ந்தும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.


அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. மேலும் சீமானை கண்டித்து மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டம் மற்றும் சீமானின் கொடும்பாவியை எரித்தனர். அதானால் கருங்கல் பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.


