spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்!-வைத்திலிங்கம்

தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்!-வைத்திலிங்கம்

-

- Advertisement -

அதிமுக வழக்கு- மேல்முறையீடு செய்யப்போவதாக
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நீதி அரசர்கள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

ஆனால் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்தை கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

we-r-hiring

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சொல்லவில்லை, நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது என்றார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்.

முழு தீர்ப்பை பார்த்தப் பின்னர் முழு நடவடிக்கை எடுத்து செல்வோம் என்றார். சிவில் கோர்ட்டில் வழக்கு இருக்க அது அவங்களுடைய கருத்துக்களை கட்டுப்படுத்தாது சொல்லி இருக்கிறார்கள். அதனால் மேல்முறையீடு செய்வோம் என்றார்.

MUST READ