spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருப்பதியில் முடி காணிக்கை அளித்த பிரபல பாடகி பி.சுசீலா

திருப்பதியில் முடி காணிக்கை அளித்த பிரபல பாடகி பி.சுசீலா

-

- Advertisement -
 
தமிழ் சினிமாவில் முதலும், முன்னணியுமான பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் தமிழ் மொழி மட்டுமன்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான பாடல்கள் பாடி இருக்கிறார். அதுமட்டுமன்றி இந்தி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட இந்திய மொழிகளிலும கிட்டத்தட்ட 25 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். சிங்கள திரைப்படங்களுக்கும அவர் பாடல்கள் பாடி இருக்கிறார். அவருடைய தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் சரளமாக பேசுவார்.
அன்று முதல் இன்று வரை அவரது குரலுக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அடுத்தடுத்து பல மொழிகளில் பாடியிருக்கும் அவர், தற்போது வயது மூப்பு காரணமாக சினிமாவிலிருந்து சற்று விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற பாடகி பி சுசீலா, முடி காணிக்கை செலுத்தினார். இதைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர், கோயிலில் இருந்து பாடல் பாடிய படியே வெளியே வந்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

MUST READ