spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கூலி' படத்தின் ஒரு வார கலெக்ஷன் எவ்வளவு?

‘கூலி’ படத்தின் ஒரு வார கலெக்ஷன் எவ்வளவு?

-

- Advertisement -

கூலி படத்தின் ஒரு வார கலெக்ஷன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'கூலி' படத்தின் ஒரு வார கலெக்ஷன் எவ்வளவு?

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினி நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனாலும் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.500 கோடியை நெருங்கி இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.500 கோடியை கடந்து விடும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.'கூலி' படத்தின் ஒரு வார கலெக்ஷன் எவ்வளவு? இதற்கிடையில் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருப்பதால் திரையரங்குகளில் கூட்டம் இல்லாத காரணத்தினாலும், வசூல் சரிய தொடங்கிய காரணத்தினாலும் இந்த படத்தை மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பி ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டால் இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ