Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியுடன் மோதும் கவின்.... 'கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

விஜய் ஆண்டனியுடன் மோதும் கவின்…. ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் ஆண்டனியுடன் மோதும் கவின்.... 'கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகர் கவின். அந்த வகையில் இவர் ‘மாஸ்க்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனத்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் நடிகர் பிரபு இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. விஜய் ஆண்டனியுடன் மோதும் கவின்.... 'கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?அடுத்தது இந்த படம் கடந்த ஜூலை மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் இந்த படம் 2025 செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே தேதியில் தான் விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ திரைப்படமும் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ