
விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடாதது தோல்வி பயத்தால் இருக்கலாம் என தூத்துக்குடியில் கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.

தூத்துக்குடி புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் பணியை துவங்கி வைத்த பின்பு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி,
‘இந்தியன் 2’ படத்தை விட ‘இந்தியன் 3’ தான் பிடிக்கும்….. விளக்கம் கொடுத்த கமல்ஹாசன்!
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சரியில்லை மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசிய பின்பு பிரதமர் அதைப்பற்றி பேசுகிறார் மத்திய அரசு மக்களை பிரித்தாளக்கூடிய வன்முறையை செய்து கொண்டிருக்கிறது என திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிடாதது பற்றி கேள்வி எழுப்பியதற்கு ஒருவேளை தோல்வி பயத்தால் அதிமுகவினர் விக்கிரவாண்டியில் போட்டியிடாமல் இருக்கலாம் என கூறியவர் இது பற்றி அதிமுகவினரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


