விஷால் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் மதகஜராஜா படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி கடைசியாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதற்கிடையில் சுந்தர் சி, விஷால் நடிப்பில் மதகஜராஜா எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் படத்தை ரிலீஸ் செய்ய எந்த ஒரு முயற்சியையும் படக்குழு எடுக்கவில்லை. இந்நிலையில் 11 வருடங்களாக கிடப்பில் கிடந்த மதகஜராஜா படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 2024 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த படமானது ரிலீஸ் செய்யப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் விஷால், சுந்தர் சி கூட்டணியில் ஏற்கனவே கடந்த 2015இல் ஆம்பள எனும் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.