HomeBreaking Newsஜி.வி. பிரகாஷ், கயடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷ், கயடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ், கயடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.ஜி.வி. பிரகாஷ், கயடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல், பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். அந்த வகையில் இவர் பல பெரிய ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பதோடு, தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்தும் வருகிறார். அதன்படி ஏற்கனவே இடி முழக்கம், மெண்டல் மனதில், பிளாக் மெயில் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக கயடு லோஹர் நடிக்கிறார். இந்த படத்தை ஏகே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ், கயடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!மாரியப்பன் சின்னா இந்த படத்தை எழுதி, இயக்குகிறார். சாம் .சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த படத்திற்கு இம்மார்டல் – IMMORTAL என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர்களை பார்க்கும்போது இந்த படமானது ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி வருவது போல் தெரிகிறது. இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ