spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்.... டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்…. டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

-

- Advertisement -

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்.... டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவில் தளபதி என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் மகன்தான் ஜேசன் சஞ்சய் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக நடிகர்களின் வாரிசுகளும் திரைத்துறையில் களமிறங்கி வெற்றி கண்டு வருகின்றனர். அந்த வகையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு படம் இயக்குவதில் ஆர்வம் இருப்பதால் இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவருடைய முதல் படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சந்தீப் கிஷன் இதில் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சிக்மா என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்.... டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படமானது தங்கம் தொடர்பான ஆக்ஷன் திரில்லர் படம் போல் தெரிகிறது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ