HomeBreaking Newsதமிழ் தீ பரவட்டும்..... சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட புதிய போஸ்டர் வெளியீடு!

தமிழ் தீ பரவட்டும்….. சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட புதிய போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் தீ பரவட்டும்..... சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட புதிய போஸ்டர் வெளியீடு!இவரது நடிப்பில் தற்போது பராசக்தி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படமானது 1960 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் தீ பரவட்டும்..... சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட புதிய போஸ்டர் வெளியீடு!இந்நிலையில் தான் நேற்று (ஜனவரி 29) இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசரில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் 1960 காலகட்டத்தில் இருப்பது போன்ற லுக்கில் காண்பிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தற்போது மேலும் ஒரு புதிய போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழ் தீ பரவட்டும் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.

MUST READ