HomeBreaking Newsதவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு

-

- Advertisement -

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து, தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டி, “லஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்” என்றும், மாற்றுக் களத்தை முன்வைத்தும் ஆட்சியைப் பிடித்த தவெக அரசின் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தவெக

we-r-hiring

நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-2027-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதியமைச்சர், முதலமைச்சர் விஜயிடம் வாழ்த்துப் பெற்றார். பேரவைக்கு முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்துள்ளனர்.

முதல்வரின் தலைமையில் வெளிப்படையான ஆட்சி:

பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், “மாபெரும் வெற்றி பெற்று ஜனநாயகப் பேரவையில் முதலமைச்சர் விஜய் அமர்ந்திருக்கிறார். வெளிப்படைத்தன்மையுடன் தவெக அரசு செயல்பட்டு வருகிறது. ஊழலற்ற அரசை நடத்தி வரும் முதலமைச்சர் விஜயின் இந்த வெற்றி, ஒரு தனிப்பட்ட கட்சியின் வெற்றி அல்ல; தமிழக மக்களின் வெற்றி” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்:

தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும், அக்குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயையும் கௌரவிக்கும் விதமாக ‘தாய்மாமன் சீர்’ முறையில் குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

  • தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி உண்டு.

  • இத்திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளும் தவெக அரசின் நகர்வுகளும்:

தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் சிங்கப் பெண் பாதுகாப்புப் படை ஆகிய திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேவேளையில், மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்துதல், ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு உருளைகள் (Gas Cylinders), விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, அண்ணன் சீர்வரிசை, அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைத் தவெக அளித்துள்ளது.

இவற்றில் பல வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆகஸ்ட் 6) வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 5 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரங்களில் மாற்றம்: அக்டோபர் 7 முதல் அமல்!

MUST READ