HomeBreaking Newsவிஜயின் கடைசி படத்திற்கு இதுதான் தலைப்பா?.... செம மாஸான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜயின் கடைசி படத்திற்கு இதுதான் தலைப்பா?…. செம மாஸான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.விஜயின் கடைசி படத்திற்கு இதுதான் தலைப்பா?.... செம மாஸான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் இளைய தளபதியாக உருவெடுத்து தற்போது தளபதியாக கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜய் தவிர பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரியாமணி, நரேன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விஜயின் கடைசி படத்திற்கு இதுதான் தலைப்பா?.... செம மாஸான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!அதன்படி இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜயின் கடைசி படமான இந்த படத்திற்கு ஜன நாயகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பாராத இந்த டைட்டில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடனும் தொண்டர்களுடனும் செல்ஃபி எடுப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படம் அரசியல் தொடர்பான கதைக்களம் என்பது தெரியவந்துள்ளது. செம மாஸான இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

MUST READ