spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசிபிஐ விசாரணை! விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள்! ரிப்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாஜக!

சிபிஐ விசாரணை! விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள்! ரிப்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாஜக!

-

- Advertisement -

பாஜகவின் நிபந்தனைகளை விஜய் ஏற்கும் பட்சத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசின் மீது சிபிஐ பழிபோடும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரித்தது குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லியில்  உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜராகியுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக எதிர்பார்த்ததை விஜய் செய்து முடித்துவிட்டார். பாஜக அரசியல்வாதி விஜயை காலி செய்துவிட்டது. தற்போது அவர் நடிகர் விஜய்தான் உள்ளார். அதனால் தான் முதலமைச்சர், சென்சார் போர்டை விஜய்க்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். ஆனால் விஜய் ஜனநாயகன் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று சொல்கிறார். ஜனநாயகன் படத்தின் கோ-புரொடியூசர் ஜெகதீஸ் தான். இதன் மூலம் படத்தின் புரொடியூசர் விஜய்தான். ஜனநாயகன் படத்தின் மீது பாஜக கை வைத்ததால் இடி கேட்ட நாகம் போல விஷம் கக்கும் தன்மையை மறுந்துவிட்டார். பராசக்தி திரைப்படம், ரிவியூ கமிட்டிக்கு போய், அங்கு போராடி 21 கட்டுகளோடு வெளியே வந்தது. இருந்தபோதும் படத்தின் முக்கியத்துவம் குறையவில்லை.

அதேபோல் ஜனநாயகன் படக்குழுவினரும் அவர்கள் சொல்லும் சில கட்களை செய்து, போராடி வந்திருக்கலாம். ஆனால் 9ஆம் தேதி விடுமுறையை குறிவைத்து படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். தற்போது விஜய் தரப்பில் உச்சநீதிமன்றம் சென்றிருப்பது ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்வதற்காக தான். ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. மேலும், அவரது நவ துவாரங்களாக உள்ள ஆதவ் அர்ஜுனா, ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் இதற்கு பாஜக தான் காரணம் என்று பேசாதது ஏன்? அவர்கள் அமைதியாக சென்றால், இந்த பழி எல்லாம் திமுக மீது விழும் என நினைத்தார்கள். பாஜக சொல்லிக்கொடுத்து கூட அவர்கள் அப்படி செய்திருக்கலாம். காரணமாக கரூர் சம்பவத்தின்போது என்ன நடந்தது? என்று அவர்களுக்கு தெரியும். கரூர் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருந்தபோது, திமுக மீது பழி விழுந்தது. தற்போது ஜனநாயகன் படத்தின் வெளியீட்டின் போது விஜய், இது மாநில அரசு செய்த சதி என்ற வீடியோ வெளியிட்டாலும் வெளியிடுவார். இதற்கு காரணம் அங்கிள் ஸ்டாலின் தான் என்பார். தணிக்கை துறை மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள துறை என்று மக்களுக்கு தெரியாது என்று விஜய் இப்படி பேசுகிறார்.

பாஜக விஜய்க்கு வைத்து நிபந்தனைகள் என்பது, 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைந்தால் அப்போது விஜய் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.மற்றொன்று 2029 மக்களவை தேர்தலில் விஜய், பாஜகவை ஆதரிக்க வேண்டும். விஜய் தற்போது கூட்டணிக்கு வர வேண்டும் என்பதும் அவர்களுடைய விருப்பம்தான். அப்படி வராவிட்டாலும் தங்கள் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அதனால் தான் குருமூர்த்தி வந்து பேசுகிறார். விஜய் வந்த உடனே பாஜகவின் பி டீம் என்று நாம் உடைத்தோம். கண்பிடித்து விட்டார்கள் என்பதற்காக பெரியாரை கொள்கை தலைவராக அறிவித்தார். சீமான், பெரியாரை அடித்தார். ஆனால் விஜய் இதுவரை சீமானை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவின் இசைவு இல்லாமல் எதுவும் நடக்காது. பாஜக இல்லை என்று யாராவது சொன்னார்கள் என்றால், அவர்கள் முட்டாள்கள்.

நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது – விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்

ஜனநாயகன் பட பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியினர் விஜய்க்கு பெரிய அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். கரூரில் 41 பேர் பலியான போதும் ராகுல்காந்தி விஜய்க்கு போன் செய்து, ஆறுதல் கூறினார். தொடக்கத்தில் முதலமைச்சர், எடப்பாடி, அண்ணாமலை போன்ற எல்லோரும் விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள். பின்னர் முதலமைச்சர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொணடு விஜய் தாமதமாக வந்தே விபத்துக்கு காரண என்று சட்டப்பேரவையில் சொன்னார். அதேபோல், ஜனநாயகன் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனக்கு ராகுல்காந்தியின் அறிவுறுத்தலின் படி தான் அவர்கள் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் ஜனநாயகன் விஷயத்தை பேச வேண்டிய விஜய், அழுக வில்லை. அடிப்படையில் விஜய் ஒரு கோழை. அவர் தலைவா படத்திற்கும் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. ஜெயலலிதாவிடம் போய் கைகளை கட்டிக்கொண்டு நின்று அனுமதி வாங்கி வந்தார். விஜய்க்கு சுயமாக முடிவு எடுக்கும் தன்மை கிடையாது. அவருக்கு தெரியாது என்பது தான் உண்மை.  விஜய் நன்றாக படித்தவர் கிடையாது. அவர் நவீன கால சிந்தனையில் இருக்கும் ஒரு நபர் தான். அவருக்கு நவீன கால பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாது.

அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…

சிபிஐ விசாரணையின் போது, கரூருக்கு தாமதமாக வந்தது ஏன்?, அப்படி தாமதமாக வருவதை கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தீர்களா?, மக்கள் மயங்கி விழுந்தது உங்களுக்கு தெரியுமா? அது தெரிந்தும் எதற்காக நடனம் ஆடினீர்கள்? ஏன் கரூரில் இருந்து ஓடினீர்கள்? என்று சிபிஐ கேள்வி எழுப்பியது. விஜய் தரப்பில் செந்தில் பாலாஜி தான் இதை செய்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே பொங்கலுக்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க உள்ளனர். இதில் விஜயை முதல் குற்றவாளியாக்கி கைது செய்வார்களா? அல்லது வழக்கை கிடப்பில் போட்டு நீண்ட நாள் அழுத்தம் கொடுப்பார்களா? என்பது விஜய் எடுக்கப்போகும் முடிவை பொறுத்ததாகும். விஜய் இதுவரை பாஜகவை திட்டாமல் முழுமையாக சரணடைந்துவிட்டார். அடுத்தக்கட்டமாக கூட்டணிக்குள் வருவாரா? என்பது தான் கேள்வி. விஜய் கூட்டணிக்கு செல்கிறபோது, அவர் மீதான வழக்கே ரத்து  செய்யப்படும். காவல்துறையின் மீது பழிபோடப்படும். இல்லாவிட்டால் அடுத்தக்கட்டமாக நடவடிக்கை எடுப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ