Homeசெய்திகள்கட்டுரைஜோதிடர் பிடியில் முதல்வர் விஜய்..! மாற்றப்படும் அரசு நிகழ்ச்சிகள் - கோடிக்கணக்கில் வீணாகும் மக்கள்...

ஜோதிடர் பிடியில் முதல்வர் விஜய்..! மாற்றப்படும் அரசு நிகழ்ச்சிகள் – கோடிக்கணக்கில் வீணாகும் மக்கள் வரிப்பணம்..!

-

- Advertisement -

Controversy Erupts as TN CM Vijay Reschedules Govt Programs Based on Astrology
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. வரவிருக்கும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வரும் சூழலில், அரசின் அதிமுக்கிய முடிவுகளும் முதலமைச்சரின் பயணத் திட்டங்களும் ஜோதிடர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள், மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன!

நள்ளிரவில் பறந்த உத்தரவுகள்! தலைகீழாக மாறிய திட்டங்கள்

we-r-hiring

மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட மாவட்டப் பயணங்களில், கடைசி நேரத்தில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்கள் நிர்வாக வட்டாரங்களையே அதிர வைத்துள்ளன.

* புதுக்கோட்டையில் அரண்மனை மாற்றம்: புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் விழா நடத்துவதற்காகக் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், “ஆயுதப்படை மைதானம் என்பது போரையும் மோதலையும் குறிக்கும்; அங்கு விழா நடத்தினால் ஆட்சிக்கே ஆபத்து” என ஜோதிடர் எச்சரித்ததைத் தொடர்ந்து, நள்ளிரவில் அதிகாரிகளுக்கு அவசர உத்தரவுகள் பறந்தன. மன்னர் பரம்பரை வரலாற்றோடு தொடர்புடைய ஆட்சியர் அலுவலக அரண்மனை வளாகத்திற்கு விழா அவசர அவசரமாக மாற்றப்பட்டது.

* பெருந்துறையில் நடந்த திடீர் குழப்பம்: இதேபோல் பெருந்துறையில் தனியார் கல்லூரி அரங்கில் நடைபெறவிருந்த அரசு விழாவும், ஜோதிடக் கணிப்புகளுக்கு ஒத்துவராது என்பதால், கடைசி நிமிடத்தில் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் சட்டெனக் குறைக்கப்பட்டது.

சென்னையில் தரமணியில் உலகத் தரத்தில் திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் அமெரிக்காவின் 'வால்கிரீன்ஸ்' நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

மக்கள் வரிப்பணம் விரையமா? எழும் கொந்தளிப்பான கேள்விகள்!

தனிநபர் நம்பிக்கைகளுக்கும் ஆன்மீக வழிபாடுகளுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை. ஆனால், ஒரு மாநில முதலமைச்சரின் அரசுப் பயணங்கள் ஜோதிடர்களின் கணிப்புகளுக்கு ஏற்ப அடுத்தடுத்து மாற்றப்படுவதால், அரசு இயந்திரமே திணறிப்போய் நிற்கிறது.

முன்அறிவிப்பின்றி விழா இடங்கள் மாற்றப்படுவதால், ஏற்கனவே செய்யப்பட்ட பிரம்மாண்ட மேடை அமைப்புகள், பாதுகாப்பு பேரிகேடுகள் எனப் வீணடிக்கப்படும் கோடிக்கணக்கிலான மக்கள் வரிப்பணத்திற்கு யார் பொறுப்பேற்பது? அரசை நடத்துவது ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளா அல்லது பின்னணியில் இருக்கும் ஜோதிடர்களா என்ற காரசாரமான விவாதம் மக்கள் மத்தியில் வெடித்துள்ளது.

கட்சியின் பதில்: “நம்பிக்கை வேறு… நிர்வாகம் வேறு!”

இந்தக் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளித்த தவெக துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் வைகைச்செல்வன், “நல்ல நேரம் பார்த்துப் பயணங்களைத் தொடங்குவது காலங்காலமாக இருக்கும் வழக்கம்தான். இதற்காக அரசே ஜோதிடத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது எனக்கூறுவது அப்பட்டமான பொய்” என மறுத்துள்ளார். மேலும், “நேர்மையான ஆட்சியைக் கொடுக்கும் ஒற்றை லட்சியமே முதலமைச்சருக்குப் போதுமானது; அந்த நேர்மைதான் எல்லா ஜோதிடங்களையும் விட வலிமையானது” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் வியூகங்களை விட ஜோதிட வியூகங்களே தவெக முகாமில் மேலோங்கியிருப்பதாக எதிரத்தரப்புகள் குற்றம்சாட்டும் நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளே இந்த ஜோதிட நகர்வுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்!

தகவல் ஆதாரம்: Tamilkural TV

MUST READ